Jump to content

User:UOJ USU/sandbox

From Wikipedia, the free encyclopedia


Jaffna University Student's Union
யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியம்
AbbreviationJUSU / UOJ USU
TypeRepresent the Students' of the University of Jaffna
Legal statusActive
PurposeRecognises the Tamil people’s following aspirations

1. Recognition of the Tamil nation,
2. Recognition of Tamils' homelands,

3. Recognition of Tamils' right to self-determination.”
HeadquartersStudents' union secretariat, Students Complex,
University of Jaffna, Yarlpannam.
Membership
~11 Faculty Students' unions
Official language
Tamil
English
President
Alagarasa Vijayakumar
Websitejusu.org

யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியம்,(English: Jaffna University Student's Union) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் உள்ளடக்கிய மாணவர்களை பிரதிநிதித்துவம் செய்து தமிழரின் தாயகத்தின் நலன்சார்ந்து பயணிக்கும் முதன்மையான மாணவர் அமைப்பாகும்.

இலங்கைப் பல்கலைக்கழங்களில் முதன்மையான தமிழ்ப் பல்கலைக்கழகமும், சிறிலங்கா அரசால் கட்டுப்படுத்தப்படும் பல்கலைகழகங்களில் இரண்டாவது பெரியதுமான யாழ் பல்கலைகழக மாணவர்களின் அங்கீகரிக்கப்பட மாணவர் ஒன்றியமாகும்.

அறிமுகம்

[edit]

ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறைகளிற்கு எதிரான மாணவர்களின் ஒருமித்த குரலாகவும், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அறிவுசார் பலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியம்.

மாணவர்கள் புத்தகங்களிற்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவர்களாக இல்லாமால் தம் சமூகம் சார்ந்த உரிமைப் போராட்டத்தில் நேரடிப்பங்களார்களாக இருக்க வேண்டும் என்பதிலும் உரிமைப் பயணத்தில்இளையா தலைமுறைகளின் பங்களிப்பு மிகவும் தவிர்க்க முடியாததொன்றாகும் என்பதிலும் கரிசனை கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் வடகிழக்கு (ஈழத்தின்) பல்கலைகழகங்களின் மாணவர் ஒன்றியங்களில் ஒன்றாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் விளங்கிக்கொண்டிருக்கின்றது.


தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை

[edit]

தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என்னும் ஈழத்தமிழர்களின் அரசியலுரிமைக் கோட்பாடுகளை தமது முதன்மையான கொள்கைகளாக வரித்துக் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியம், தமிழர்களின் உரிமைக்கான பயணத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை செய்தும் செய்து கொண்டும் இருக்கின்றது.


கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்புக்கு எதிரான மாணவர் குரல்

[edit]

சிறிலங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரச பயங்கரவாதத்தால் தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு எதிரான மாணவர்களின் குரலாக யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

தமிழரின் ஈழத் தாயகத்தில் சிறிலங்கா அரசால் முன்னெடுக்கப்படும் குறிப்பிடத்தக்க இனவழிப்பு நடவடிக்கைகள்.

[edit]
  1. - அரச படைகளால் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள்
  2. - அரசியல் கைதிகள் (விசாரணைகள் ஏதுமின்றி ஆண்டுக்கணக்கில் சிறைகளில் வாடுகின்றனர்.)
  3. - திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்
  4. - இராணுவமயமாக்கம்
  5. - பௌத்த மயமாக்கம்
  6. - சிங்கள மயமாக்கம்
  7. - காணி அபகரிப்பு
  8. - தொல்லியல் எனும் போர்வையில் சிங்கள ஆக்கிரமிப்பு
  9. - அழித்தொழிக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்


தமிழர் தாயகத்தின் விடுதலைக்கான போரில் தம்முயிர் நீத்த மாவீரர்களின் நினைவேந்தி நவம்பர் 27 ஆம் திகதி தமிழர் தாயகம் உள்ளிட்ட தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களெங்கும் உணர்வெழுச்சியோடு இடம்பெறும், மாவீரர் தின நினைவேந்தல்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் எழுச்சி கொண்டு நடைபெறும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்களின் பெருவாரியான பங்கேற்புடன் தாயக வீரர்களின் நினைவுகளை ஏந்தி மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

மாவீரர் தினத்திற்கு முன்னதாக ஒரு வாரம் மாவீரர் வாரம் பிரகடணப்படுத்தப்பட்டு யாழ் பல்கலைகழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மாவீரர் தூபியின் முன்னால் அடுத்த தலைமுறை தமிழ் இளம் தலைமுறையினால், தம் இன மக்களின் உரிமைக்கான களச்சமராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கங் கொண்டு சிறிலங்கா இராணுவத்தால் அனைத்துலக சட்டங்களையும் மனித உரிமைகளையும் மீறி தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள் போன்ற தடைசெய்யப்பட்ட குண்டுகள் வீசப்பட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில், இனப்படுகொலைக்குள்ளான தமிழ் மக்களை நினைவேந்தி இடம்பெறும் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலாகும்.

மே 13 தொடக்கம் மே 18 வரையான ஒருவார காலத்தினை இனப்படுகொலை வரமாக பிரகடணம் செய்து தமிழ் மக்கள் நினைவேந்தி வருகின்றனர். இந்த ஒரு வாரகாலத்தில் பல இலட்சம் கொத்துக்கொத்தான கொல்லப்பட்டார்கள். மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் அனைவரும் திரண்டு இனப்படுகொலைக்குள்ளான தமிழ் மக்களை நினைவேந்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்திலும் கண்ணீர்களுக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெறும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத் தூபி முன்னே மாணவர்கள் இனப்படுகொலைக்குள்ளான தமிழ் மக்களை நினைவேந்தி அஞ்சலிப்பர்.


  • 2022 மே – முள்ளிவாய்க்கால் கஞ்சி

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் போது தமிழ் மக்கள் உணவிற்காகவும் ஏனைய அடிப்படை தேவைகளிற்காகவும் வரிசைகளில் நின்றதையும் சந்தித்த அவலங்களையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கம் கொண்டு தாயகம் எங்கும் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தமிழினப்படுகொலை நினைவுத் தூபி முன்னால் தமிழினப்படுகொலை வாரம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.