User:Subaanu
Appearance
அம்மா
மண்ணில் குழந்தையாய்த் தவழ்ந்து, சிறுமியாய் ஓடி விளையாடி, மங்கையாய் வாழ்க்கையை இரசிக்க ஆரம்பிக்கும் ஒரு பெண் தாய் என்னும் அந்த உயரிய நிலையை அடையும் போதுதான் முழுமையான ஒரு பெண்ணாக ஆகிறாள். தாய்மை என்பது இறைவனால் பெண்களுக்கே வழங்கப்பட்ட வரப்பிரசாதம் ஆகும். அதுமட்டுமின்றி, தாய் என்பவள் நம்மை ஒன்பது மாதம் தன் கருவறையில் சுமந்து, நாம் உதைக்கும் வலிமையும் பொறுத்துக் கொண்டு அதைச் சுகமாகக் கருதும் ஒரே உயிராகும். குழந்தை பிறந்த பிறகு, தாய் தன் இரத்தத்தையே பாலாக்கி, பாலூட்டித் தாலாட்டுவாள். இரவு பகல் பாராது தாய் தன் குழந்தைகளைக் கண்ணினைக் காக்கும் இமை போல காத்து வளர்ப்பாள்.