User:Lukmanul Hakeem Mohamed Niyas
முஹம்மத் நியாஸ் லுக்மானுல் ஹகீம் புத்தளம் கரைதீவை பிறப்பிடமாக கொண்டவர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைத்துறை பட்டதாரி. மெட்ரோபொலிட்டன் யூனிவர்சிட்டி மொன்டெர்ட்ரெயின் சிறப்பு உளவியல் பட்டதாரி.
இந்தியாவில் கோயம்புத்தூரில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணை கல்லூரியான ரத்னவேல் சுப்பிரமணியம் கல்லூரியில்( RVS College of Arts & Science) தனது முதுமாணி கற்கையையும், அதே பல்கலைகழகத்தின் மற்றுமோர் இணை கல்லூரியான ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியில்( Sree Narayanaguru College of Arts & Science) தனது ஆய்வியல் நிறைஞ்சர் மற்றும் உள ஆரோக்கியமும் அசாதாரண உளவியலும்( Mental Health and Abnormal Psychology)எனும் பகுதியில் தனது கலாநிதி கற்கையையும் நிறைவு செய்தவர்.
"Study on Dependent Personality Disorder Among College students" எனும் தலைப்பில் தனது முதுமாணிக்கான ஆய்வையும்,
"Depression and Anxiety Among Physically Challenges" எனும் தலைப்பில் தனது ஆய்வியல் நிறைஞ்சர் கற்கைக்கான ஆய்வையும்,
"Effectiveness of Neuro Linguistic Programming (NLP) in Enhancing Self Esteem Among Adolescents"
என்ற தலைப்பில் தனது கலாநிதி கற்கைக்கான ஆய்வையும் சமர்ப்பித்துள்ளார்.
அத்தோடு 20 இற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சர்வதேச இதழ்களில் பிரசுரித்துள்ளதுடன் உளவியல் சிகிச்சைகள்( Emotional Mastery, Emotional Intelligence, Art Psychotherapy, Psychometric Testing, IPSRT ,NLP, NLP Coaching, CBT, Relationship Coaching,Family Therapy, Sex Therapy,Hypnotherapy,...) தொடர்பான ஏராளமான பயிற்சி நெறிகளையும் நிறைவு செய்துள்ளார். சான்றிதல் அளிக்கப்பட்ட பயிற்சியாளராகவும்( Certified Practitioner & Coach) பணியாற்றுகிறார்.
300 இற்கும் மேற்பட்ட வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் 1000 இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச செயலமர்வுகள், பட்டறைகள், கருத்தரங்குகளில் வளவாளராக கலந்துகொண்டவர்.
தற்போது கொழும்பிலும், கண்டி, புத்தளம், காலி போன்ற பிரதேசங்களிலும் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைகளில்
வருகைதரு உளவியலாளராகவும், உளவியல் சிகிச்சையாளராகவும் தனது பணிகளை தொடர்கிறார்.
அவ்வாறே
Mind Coaching Academy நிறுவனத்தில் கல்விசார் தலைவராகவும்(Academic Director)
Royal Academy of Professional Studies, IIPM உயர்கல்வி நிறுவனங்களின் கல்வித் தலைவராகவும்(Head of Academics)செயற்படுகிறார்.