Jump to content

User:DR.s.a.Annaiyappan/sandbox

From Wikipedia, the free encyclopedia
  • Comment: The is still English Wikipedia KylieTastic (talk) 09:39, 20 December 2024 (UTC)


DR.s.a.Annaiyappan

பயனர்:முனைவர் சு. அ. அன்னையப்பன்:

முனைவர் சு. அ. அன்னையப்பன் இவர் சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்; தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை உலக மக்களுக்கு எடுத்துக் கூறிக்கொண்டு வருகிறார். இவர் தமிழர் இனம், தமிழர் மொழி, தமிழர் பண்பாடு, பண்டைத் தமிழர் வரலாறு போன்ற கூறுகளில் மிகுந்த ஈடுபாட்டோடு செயலாற்றிக் கொண்டும் உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறிக்கொண்டும் இருக்கிறார். பண்டைத் தமிழரின் உண்மை வரலாற்றைச் சான்றுகளோடு நிறுவிக் கொண்டு வருகிறார். பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் சமணர்கள், பெளத்தர்கள் ஆற்றிய கல்விப் பணிகள், சித்த மருத்துவப் பணிகள், இலக்கியப் பணிகள், இலக்கணப் பணிகள் ஆகியவற்றைப் பறைசாற்றிக் கொண்டு வருகிறார். சமணர்களே தமிழ் மொழியில் இருந்த பழைய இலக்கண இலக்கியங்களை மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள்; அதைப் போன்றே மீண்டும் இலக்கண இலக்கியங்களை இயற்றியும் கொடுத்திருக்கிறார்கள். அதற்குச் சான்று பண்டைத் தமிழ் இலக்கணங்களும் இலக்கியங்களும் சான்றுகளாகும். இவர் பண்டைத் தமிழருக்கு மதம் என்ற சொல்லும், கடவுள் என்ற சொல்லும், பக்தி என்ற சொல்லும் தெரியாது என்று கூறியிருக்கிறார். இச்சொற்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டுச் சொற்கள்; பண்டைய தமிழர்கள் இயற்கையோடு இழைந்த வாழ்வினை வாழ்ந்தார்கள் என்று புதிய ஆய்வுச் செய்திகளைக் கூறிக் கொண்டு வருகிறார். Category:Article Category:Biography